Wednesday 13 August, 2008

அபினவ் பிந்த்ரா


ஆகஸ்ட் பதினொன்றாம் நாள் ,நம் இந்தியா உலக அரங்கில் தன் புகழை அபினவ் மூலம் பொறித்துக்கொண்ட நாள் .அன்றுதான்
பீஜிங் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்-ரைஃபில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்திய அபினவ், மொத்தம் (596+104.5) 700.5 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றார்.

இதுவே, ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபர் பிரிவில் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம் ஆகும். மேலும், இதுவரை பெற்றுள்ள தங்கப் பதங்கங்களில், இது 9-வது தங்கமாகும்.
முன்னதாக கிடைத்த 8 தங்கப் பதக்கங்களும் இந்திய ஹாக்கி அணி ஈட்டித் தந்தவை.
அத்துடன், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்தப் பெருமையும் பிந்த்ராவையேச் சாரும்.

கடைசியாக, கடந்த 1980-ம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி, ஸ்பெயின் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

சாதனைகள்

* 2006- மெல்போர்ன் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள்.

* 2005 - பேங்காக்கில் நடந்த ஆசிய துப்பாக்கிச் சுடுதல் கோப்பையில் தங்கம்.

* 2004- ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் சாதனை முறையடிப்பு; இறுதிச் சுற்றுக்குத் தகுதி

* 2004 - ஆல் அமெரிக்கன் கோப்பையில் தங்கப் பதக்கம்

* 2002 - மான்செஸ்டர், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள்.

* 2002 - ஐரோப்பிய சர்க்யூட் கோப்பை - 7 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம்.

* 1999 - 2000, 2001, 2002, 2003, 2005 - தேசிய சாம்பியன் பட்டங்கள்

* ஜூனியர் பிரிவு போட்டிகளில் பல தங்கப் பதங்கங்களும், உலக சாதனைகளும்.

முக்கிய விருதுகள்

* அர்ஜூனா விருது - 2000
* ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது - 2001
* மகாராஜா ரஞ்சித் சிங் விருது - 2001
* கே.கே.பிர்லா விருது - 2002
* பஞ்சாப் பிராமன் பாத்ரா விருது - 2006