Friday 19 December, 2008

ஹெல்த் ப்ளீஸ்

சுவரின்றி சித்திரம் இல்லை .அதனால் நல்ல ஹெல்தியா சாப்பிடுங்க !நல்லா இருங்க! முடிஞ்சா இந்த ரெசிபிய கடைபிடியுங்க! கிளிக் பண்ணி பெரிசா பாத்துக்கோங்க !












Wednesday 17 December, 2008

ஹே எங்க ஊரு!

மதுர திருவிழா !மனச அள்ளுது பாரு!
Power Point 12 height="500" width="100%"> value="http://documents.scribd.com/ScribdViewer.swf?document_id=9083593&access_key=key-luw30k10i1zcvcg42or&page=1&version=1&viewMode=">                 
   Publish at Scribd or explore others:        

Saturday 13 December, 2008

RoadLessTravelled


நானும் எதாவுது புதுசா எழுதனும்னு நினைகிறேன் !ஒன்னும் வரமாடேங்குதேப்பா !எல்லாரும் அதுங்கிராங்கே இதுங்குராங்கே அப்படிங்கிராங்கே இப்படிங்கிரங்கே ! சே சே சே ஒன்னுமே தொனளியேடா ராசா ! அவன் அவன் பிளாக் ஆரம்பிச்சி ஆறே மாசத்துல பிக் அப் ஆகிடுறானுங்க!வருஷம் ஒன்னு ஆகி கொக்க மக்கா ஒன்னும் சிக்கமட்டேங்குதே! சரிப்பு ஒன்னு உருப்படியா சொல்லுறேன் கேட்டுகங்கோ !நீ இங்கலிஷ் ஒழுங்கா படிப்பியாப்பு ? அப்படினா ஒடனே புஸ்தக கடைக்கு போ ! "RoadLessTravelled" அப்படிங்கிற புத்தகத்த வாங்கு ! ஒரு ரூமுல போயீ ஒக்காந்து தெனமும் படியப்பு! சத்தியமா உருப்பட்ட்ருவ!

Wednesday 13 August, 2008

அபினவ் பிந்த்ரா


ஆகஸ்ட் பதினொன்றாம் நாள் ,நம் இந்தியா உலக அரங்கில் தன் புகழை அபினவ் மூலம் பொறித்துக்கொண்ட நாள் .அன்றுதான்
பீஜிங் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்-ரைஃபில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்திய அபினவ், மொத்தம் (596+104.5) 700.5 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றார்.

இதுவே, ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபர் பிரிவில் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம் ஆகும். மேலும், இதுவரை பெற்றுள்ள தங்கப் பதங்கங்களில், இது 9-வது தங்கமாகும்.
முன்னதாக கிடைத்த 8 தங்கப் பதக்கங்களும் இந்திய ஹாக்கி அணி ஈட்டித் தந்தவை.
அத்துடன், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்தப் பெருமையும் பிந்த்ராவையேச் சாரும்.

கடைசியாக, கடந்த 1980-ம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி, ஸ்பெயின் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

சாதனைகள்

* 2006- மெல்போர்ன் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள்.

* 2005 - பேங்காக்கில் நடந்த ஆசிய துப்பாக்கிச் சுடுதல் கோப்பையில் தங்கம்.

* 2004- ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் சாதனை முறையடிப்பு; இறுதிச் சுற்றுக்குத் தகுதி

* 2004 - ஆல் அமெரிக்கன் கோப்பையில் தங்கப் பதக்கம்

* 2002 - மான்செஸ்டர், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள்.

* 2002 - ஐரோப்பிய சர்க்யூட் கோப்பை - 7 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம்.

* 1999 - 2000, 2001, 2002, 2003, 2005 - தேசிய சாம்பியன் பட்டங்கள்

* ஜூனியர் பிரிவு போட்டிகளில் பல தங்கப் பதங்கங்களும், உலக சாதனைகளும்.

முக்கிய விருதுகள்

* அர்ஜூனா விருது - 2000
* ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது - 2001
* மகாராஜா ரஞ்சித் சிங் விருது - 2001
* கே.கே.பிர்லா விருது - 2002
* பஞ்சாப் பிராமன் பாத்ரா விருது - 2006

Saturday 28 June, 2008

நான் எழுதும் கடிதம்

காதலனே ...,
கண்களில் நீரை தேக்கி....,
எண்ணங்களில் உன்னை நிரப்பி....,
என் உயிரினில் உன்னை கலந்து....,
இங்கே..
நான் வடித்திருப்பது....,
கவிதையல்ல....,
நம் காதலை...!!!
உன் அழகையெல்லாம்...,
என் விழியில் நிரப்பி...,
நம் காதலை புகழ்ந்து பாட...,
உலக மொழிகளுக்கெல்லாம்...,
தூது விட்டேன்...!!!
ஏனோ..,
அனைத்தும் ஊமை ஆகி விட்டன...,
உவமையில்லாமல்...!!!
என் இதய ஏட்டில்...,
என்றோ..,
உன் பார்வைகள்..,
அச்சாகிவிட்டன...!!
என்றோ..,
உன்னிடம்...,
அடகு வைக்கப்பட்ட...,
என் கண்கள்...,
இன்னும் மீட்கப்படாமலே இருக்கின்றன...!!
உன் நினைவுகளில்...,
நனைவதால்...,
என்னில்...,
நான்கும் மறைந்தது...!!!
என்றோ...,
என் கன்னத்தில் பட்ட..,
உன் கைத்தடம்...,
இன்று..,
என் இதயத்தில்..,
காமத் தழும்பாகி கிடக்கிறது ...!!!
நான்..
மலர் சூடுவதையே..,
நிறுத்திவிட்டேன்...,
உன் எண்ணங்கள்....,
மலராய் இருப்பதால்..!!
நான்..
ஈரக்கூந்தலை உலர்த்துவதை...,
விட்டு விட்டேன்...,
உன் மூச்சு காற்று...,
உலர்த்த..,
முன் வந்து நிற்பதால்....!!!
கொம்புள்ள எழுத்துகள்...,
முட்டுவதில்லை..!!!
ஆனால்..,
உன் பெயரில் உள்ள...,
எழுத்து மட்டும் என்னை...!!!
என் நித்திரை...,
உன் கனவுப்படங்களை...,
ஒட்டி வைத்திருக்கும்...,
ஆல்பமாகவே இருக்கிறது...!!!
உன் கனவு..,
எனும் விளக்கில்...,
இரவில்..,
நான் எழுதும்..,
இக்கவிதை...,
பகலின் வெளிச்சத்தில்...,
பல உண்மைகளை...,
பரிகாசிக்கும் ..!!!

Tuesday 24 June, 2008

சொல்ல வந்த போது..

அழகான தொட்டியிலே நீந்தும் மீனை கொட்டும் அருவியிலே விட்டால் என்ன ஆகும்?.......வேகப்பழக்கம் இல்லாமல் அது படும் பாடா? அல்லது நிறைய நீரை கண்ட ஆனந்தமா?இதை நான் எழுதும் போது என்ன மனநிலையில் இருந்திருப்பேன் என்று நீங்கள் உணர்ந்திருக்க சாத்தியமில்லை.ஒரு காரியத்தை சரியா தவறா என்று உரைக்க முடியா நிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் .இந்த தொகுதியை இப்பொழுது தொடர்ந்து எழுத முடியா மனநிலையில் நான் மாட்டிக்கொண்டுவிட்டேன்...என் உணர்வுகள் உங்களை கூடிய விரைவில் கண்டிப்பாக தாலாட்டும் என்ற நம்பிக்கையில் ..........

Saturday 3 May, 2008

இனிய சம்பவம்

என் பணியின் பொருட்டு நிதமும் ஒரு மணி நேரப்பயணம் மேற்க்கொள்வது வழக்கம். பயண அலுப்பை தவிர்க்க ஹெட்செட்டில் பாடல் கேட்டுக்கொண்டே செல்வேன்.அன்றும் அதே போல்தான் பயணம்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி.எனைப்பார்த்தும் சிலர் புன்னகை கூட புரிந்தார்கள்.என் அருகில் இருந்த ஒரு பெண்மணியும் எனைப்பார்த்து புன்னகை செய்தாள். எனக்கு ஒரே ஆச்சரியம் .இன்று எதாவது நல்ல நாளாய் இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே பயணம் செய்தேன்.சரி எதற்கும் நம் உடன் பணிபுரிபவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று,ஹெட்செட்டை கலட்டிககொண்டே பேருந்தை விட்டு கிழே இறங்கினேன்.இறங்கியவுடந்தான் அனைவரின் மகிழ்வுற்க்கு காரணம் புரிந்தது. செல்லில் இன்னும் பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.