Saturday, 28 June 2008

நான் எழுதும் கடிதம்

காதலனே ...,
கண்களில் நீரை தேக்கி....,
எண்ணங்களில் உன்னை நிரப்பி....,
என் உயிரினில் உன்னை கலந்து....,
இங்கே..
நான் வடித்திருப்பது....,
கவிதையல்ல....,
நம் காதலை...!!!
உன் அழகையெல்லாம்...,
என் விழியில் நிரப்பி...,
நம் காதலை புகழ்ந்து பாட...,
உலக மொழிகளுக்கெல்லாம்...,
தூது விட்டேன்...!!!
ஏனோ..,
அனைத்தும் ஊமை ஆகி விட்டன...,
உவமையில்லாமல்...!!!
என் இதய ஏட்டில்...,
என்றோ..,
உன் பார்வைகள்..,
அச்சாகிவிட்டன...!!
என்றோ..,
உன்னிடம்...,
அடகு வைக்கப்பட்ட...,
என் கண்கள்...,
இன்னும் மீட்கப்படாமலே இருக்கின்றன...!!
உன் நினைவுகளில்...,
நனைவதால்...,
என்னில்...,
நான்கும் மறைந்தது...!!!
என்றோ...,
என் கன்னத்தில் பட்ட..,
உன் கைத்தடம்...,
இன்று..,
என் இதயத்தில்..,
காமத் தழும்பாகி கிடக்கிறது ...!!!
நான்..
மலர் சூடுவதையே..,
நிறுத்திவிட்டேன்...,
உன் எண்ணங்கள்....,
மலராய் இருப்பதால்..!!
நான்..
ஈரக்கூந்தலை உலர்த்துவதை...,
விட்டு விட்டேன்...,
உன் மூச்சு காற்று...,
உலர்த்த..,
முன் வந்து நிற்பதால்....!!!
கொம்புள்ள எழுத்துகள்...,
முட்டுவதில்லை..!!!
ஆனால்..,
உன் பெயரில் உள்ள...,
எழுத்து மட்டும் என்னை...!!!
என் நித்திரை...,
உன் கனவுப்படங்களை...,
ஒட்டி வைத்திருக்கும்...,
ஆல்பமாகவே இருக்கிறது...!!!
உன் கனவு..,
எனும் விளக்கில்...,
இரவில்..,
நான் எழுதும்..,
இக்கவிதை...,
பகலின் வெளிச்சத்தில்...,
பல உண்மைகளை...,
பரிகாசிக்கும் ..!!!

1 comment:

Selva - CTC Trekker said...

Hi Raji, Really superb....Remba super irukku.... Ithu neenga kandippa rasithu manathil ullathai remba vazhiyoda ezhithi irukkinga ninaikiren.... anyhow dont want to ask about personnal...but konjam santhosama kavithaigal ezhuthungal please...gud jod done...continue ur writings..